வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் சுமார் 102மாணவிகள் தமிழ்த்துறை சார்பில் களப்பயணமாக இன்று(26.07.25) கீழடி அகழ்வாய்வு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் . அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பண்டையத் தமிழரின் மட்பாண்டங்கள், சூடு மண் சிலைகள், முதுமக்கள் தாழிகள்,அணிகலன்கள்,வேளாண் கருவிகள், கடல் வணிகத்திற்கு பயன்படுத்தப்பட்ட படகு போன்றவற்றினைக் கண்டும்,மேலும் சில தகவல்களைக் கேட்டும் பயன்பெற்றனர். இளங்கலை இரண்டாம் ஆண்டு பொதுத்தமிழில் "தமிழக வரலாறும் பண்பாடும்" என்ற பாடத்தினை எளிமையாகப் படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் மாணவிகளுக்கு இது ஓர் அரிய வாய்ப்பாக அமைந்தது